Tamil Song Lyrics
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி
சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி
எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி
பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே (2)
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன் (2)
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை (2)
1. நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி (2) – கல்வாரியின்
2. ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
ஆலய மாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும் (2) – கல்வாரியின்
3. சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் சாக
தேவா அருள் செய்குவீர் (2) – கல்வாரியின்
4. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் நான் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தே கண்டதால் (2) – கல்வாரியின்
வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம் – வாரும்
2. ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே, வாரும் ஐயா
கழுத்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் – வாரும்
3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே, நலம் தருவாய் – வாரும்
4. உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும்
5. ஆதரையிலென் ஆறுதலே
அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும்
6. பாடும் தேவதாசரின் கவி
பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன்
திவ்ய ஆவி தந்தருள்வாய் – வாரும்
அசாத்தியங்கள் சாத்தியமே
தேவா உந்தன் வார்த்தையாலே
அசையாத மலை கூட அசைந்திடுமே
அமாராத புயலும் கூட அமர்ந்திடுமே
எல்லா புகழும் எல்லா கனமும்
என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே
எல்லா துதியும் எல்லா உயர்வும்
என்னில் நிலைவரமானவர்க்கே
எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே
எனக்காய் பேசும் இயேசுவுக்கே
1)நான் எடுத்த தீர்மானங்கள்
ஒன்றன் பின்னாக தோற்றனவே
சோராமல் எனக்காக உழைப்பவரே
தோற்காமல் துணைநின்று காப்பவரே
2)என் கை மீறி போனதெல்லாம்
உம் கரத்தால் சாத்தியமே
என் கரம் தவறியே இழந்ததெல்லாம்
உம் கரம் தவறாமல் மீட்டிடுமே
3)பரிந்துரைகள் செய்யாததை
பரக்கிருபை செய்திடுதே
தானாக முன்வந்து உதவினீரே
முன்னுரிமை நானென்று காண்பித்தீரே
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே
விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே
மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே
காணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீ
எந்நாளுமே துதிப்பாய் !
அனுபல்லவி
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது – எந்நாளுமே
சரணங்கள்
1.பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்
பாவங்கள் எத்தனையோ ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி – எந்நாளுமே
2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை ?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,
நேயமதாக ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே
3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே , பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு ,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால் – எந்நாளுமே
4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே ,
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே , சத்திய மேயிது – எந்நாளுமே
5. மன்னிப்பு மாட்சிமையாம் – மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே – எந்நாளுமே
6. தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு ?
எந்த வேளையும் அவரோடு தங்கினால் ,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே – எந்நாளுமே
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அருந்துணையே
பாதைக்கு நல்ல தீபம் இதே!
தாய் தன சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீர் அன்றோ உம உள்ளங்கையில்
வல்லவா எந்தன் புகழ் இடமே!
திக்கற்றோறாய் கைவிடேனே
கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணி நீரே!
1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
சுபையை உயிர்ப்பிக்குமே.
பல்லவி: அருள் ஏராளம்
அருள் அவசியமே;
அற்பமாய் சொற்பமாயல்ல,
திரளாய்ப் பெய்யட்டுமே.
2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேக மந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம்.
3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்!
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன்.
4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
பொழியும் இச்சணமே!
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே!
1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
சுபையை உயிர்ப்பிக்குமே.
பல்லவி: அருள் ஏராளம்
அருள் அவசியமே;
அற்பமாய் சொற்பமாயல்ல,
திரளாய்ப் பெய்யட்டுமே.
2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேக மந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம்.
3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்!
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன்.
4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
பொழியும் இச்சணமே!
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே!
ஸ்தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கின்றோம் நின்னடியார்
திருநாமத்தின் ஆதரவில்
வான தூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஒய்வின்றிப் பாடி துதிக்க மாபெரும்
மன்னவனே உமக்கு
நின் உதிரமதினால் திறந்த
நின்ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்கும் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்
இத்தனை மகத்துவமுள்ள பதவி
இப்புழுக்களாம் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின்கிருபை
எத்தனை ஆச்சரியம்
இன்றைத் தினமதிலும் ஒருமித்து
கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
நீரல்லால் எங்களுக்கு பரலோகில்
யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறோரு
தேற்றமில்லைப் பரனே
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆ ஆ ஆ.. அல்லேலூயா ஆமென்
வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
சாத்தான் உன்னை எதிர்த்த போதும்
ஜெயகிறிஸ்து உன்னோடு உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதி கானம் தொனித்து மகிழ்வாய்
கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம்
படைக்கின்றோமே – ஏங்குகின்றோம்
உம் ஆசீர் பெறவே
ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன்
ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கே
ஆதியுமந்தமும் இல்லோனே
அருபனே உமக்கென்றும் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா
பொற்கரனே ஓமேகாவே
பொன்னகர் மன்னர் பூவில் வந்தாரே
புல்லணை மீதிலே ஸ்தோத்திரம்
பட்சமுற்று எந்தன் பாரம் தீர்த்த
பெத்தலை வாசனே ஸ்தோத்திரம்
மாயமாம் உலகை மறந்து நானும்
மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட
மயங்காமல் நீர் தாரணியில்
மனுவான அன்புக்காய் ஸ்தோத்திரம்
அமரர் போற்றும் அழகுள்ளோனே
அரூபியே சொரூபியே ஸ்தோத்திரம்
அளியும் ஆதி அன்பையே
வழியில் விரைந்து செல்லவே
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை
வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்
கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவீட்டு உன் ஆவிபோனால்
கூட உனோடு வருவதில்லை
அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர்நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை
வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமமல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே
தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களல் நீ குணமடைய
சத்திய வாக்கை நம்பியே வார்
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணி
செய்து முடித்தோர் – அழகாய்
2. காடு மேடு கடந்த சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய்
3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும், போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய்
4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் – அழகாய்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனைத் தலைவராம் இயேசுவின் – பொற் தளத்தில்
அழகாய் நிற்கும் யாரிவர்கள்
திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டடைந்தேன்
தேவ சமுகத்திலே.
1. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்குத் தங்கிடுவேன்
2. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே
3. மனம் மாற மாந்தன் நீரல்ல
மனவேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்
4. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே
5. உம்மை ஊக்கமாய் நோக்கிப்பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே
6. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே
7. விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீர பாதை காட்டினீரே
வளர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்
8. பலர் தள்ளின மூலைக்கல்லே
பரம சீயோன் மீதிலே
பிரகாசிக்கும் அதை நோக்கி
பதறாமலே காத்திருப்பேன்
பல்லவி: கர்த்தாவே உம் சத்தம் கேட்டிடச் செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன் (2)
உம் வார்த்தையைக் கற்றுத்தாரும்
உம் மோடே அதில் நான் நடக்க
1. காலையில் எழுந்து உம்சத்தம் கேட்கவே
எனக்கு மிகவும் இன்பம்
தினமெல்லாம் என்னை ஆயத்தப்படுத்தி
ஆபத்தில் இரட்சியும் - கர்த்
2. உம் வார்த்தையைப் படித்து உம் சத்தம் கேட்டு
என்னை சரி செய்து கொள்வேன்
உம்முடைய வழியில் நடக்க எனக்கு
எப்பொழுதும் கற்றுத்தாரும் - கர்த்
3. பயங்களிலிருந்து புயல்களிலிருந்து
உம் சத்தம் கேட்கச் செய்யும்
அடைக்கலம் நீரே ஓ பெரிய தேவனே
தைரியப்படுத்தும் என்னை - கர்த்
4. பேசிடும் தேவா தெளிவாகவே
உம் தொனி எனக்காகவே
உம்மோடும் நானே மனுஷருடனுமே
சரி செய்து கொள்ளுவேனே - கர்த்
5. உம் வாக்கியம் அக்கினி சம்மட்டியைப் போல
இரு புறமும் கருக்குள்ள பட்டயம்
உம் வாக்யம் தானே அற்புதக் கண்ணாடி
ரூபத்தைக் காட்டுகிறது - கர்த்
6. என் பாடுகள் மூலம் கற்றுக் கொண்டேனே
வசனத்தை அதிகமாய்
காப்பாற்றும் தேவா விசுவாசத்தில்
உம்மில் நிலைத்து நிற்க - கர்த்
7. என் இருதயத்தின் தீய யோசனையை
கண்டிக்கும் உம் வார்த்தைகள்
உம்சாயலிலே மாற்றிடும் என்னை
உம் மகிமைக்காகவே - கர்த்
எந்தன் நாவில் புதுபாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன் -உயிருள்ள
நாள் வரையில் அல்லேலூயா
பாவ இருள் என்னை வந்து
சூழ்ந்து கொள்கையில் -தேவனவர்
தீபமாய் என்னை தேற்றினார்
வாதை நோயும் வந்தபோது
வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி
துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார்
சேற்றில் வீழ்ந்த என்னையவர்
தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம்
ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார்
தந்தை தாயும் நண்பர் உற்றார்
யாவுமாயினார் – நிந்தை தாங்கி
எங்குமவர் மேன்மை சொல்லுவேன்
இவ்வுலக பாடு என்னை
என்னை செய்திடும் -அவ்வுலக
வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்
தாசரே, இத்தாரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்.
நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
வெளிச்சம் வீசுவோம்
தாசரே, இத்தாரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்.
1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமந்தோரை,
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்,
உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை,
நமது துக்கத்தை, நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே.
தாசரே, இத்தாரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்.
2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்;
உசித நன்மைகள் நிறைந்து, தமை மறந்து,
இயேசு கனிந்து, திரிந்தனரே.
தாசரே, இத்தாரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்.
3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்;
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்,
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே.
தாசரே, இத்தாரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்.
4. இந்த தேச மாது சிரோமணிகள்
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து, அறிவிலுயர்ந்து,
நிர்பந்தங்கள் தீர்ந்து, சிறந்திலங்கிட.
தாசரே, இத்தாரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்.
5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்;
ஊக்கமாக ஜெபித்திடுவோம், நாமுயன்றிடுவோம்,
நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம்.
தாசரே, இத்தாரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்.
எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ
எந்நாளுமே துதிப்பாய்!
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த; (2)
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது,
எந்நாளுமே துதிப்பாய்!
1. பாவங்கள் எத்தனையோ, - நினையா திருத்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் (2)
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி,
எந்நாளுமே துதிப்பாய்!
2. எத்தனையோ கிருபை, - உன்னுயிர்க்குச் செய்தாரே,
எத்தனையோ கிருபை?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி, (2)
நித்தியமான ஜீவனை மீட்டதால்,
எந்நாளுமே துதிப்பாய்!
3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே, பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை!
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு, (2)
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால்,
எந்நாளுமே துதிப்பாய்!
4. பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே,
பூமிக்கும் வானத்துக்கும்;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் (2)
சாலவும் தங்குமே, சத்திய மேயிது,
எந்நாளுமே துதிப்பாய்!
5. மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்;
எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே? (2)
எல்லாம் உன்பாவம் அகன்றதத்தூரமே,
எந்நாளுமே துதிப்பாய்!
6. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு?
எந்த வேளையும் அவரோடு தங்கினால், (2)
ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே,
எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ
எந்நாளுமே துதிப்பாய்!
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே! (2)
உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்,
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
1. ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்,
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர்.
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
கடன் பட்டவர் கண்திறக்கவே;
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்.
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
3. தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே;
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக்
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்.
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்;
உம்மைப்போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வமே நீர்.
ஆ! ஆனந்தம், ஆனந்தமே!
அல்லும், பகலிலும் பாடிடுவேன்.
இயேசுவே எந்தன் ஆருயிரே!
2. பெற்ற தாயும் என் தந்தையும் ஆனவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே;
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரே
வாக்கு மாறாதவரே.
ஆ! ஆனந்தம், ஆனந்தமே!
அல்லும், பகலிலும் பாடிடுவேன்.
இயேசுவே எந்தன் ஆருயிரே!
3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்;
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நீர்.
ஆ! ஆனந்தம், ஆனந்தமே!
அல்லும், பகலிலும் பாடிடுவேன்.
இயேசுவே எந்தன் ஆருயிரே!
4. பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ
பணம் ஆஸ்தியும் வீண் அல்லவோ;
பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே
போதும் எனக்கு நீரே.
ஆ! ஆனந்தம், ஆனந்தமே!
அல்லும், பகலிலும் பாடிடுவேன்.
இயேசுவே எந்தன் ஆருயிரே!
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை இராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்.
1. அற்புதமான அன்பே - என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே (2)
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே. (2)
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை இராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்.
2. ஜோதியாய் வந்த அன்பே - பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே(2)
தியாகமான தேவ அன்பே
திவ்ய மதுர அன்பே.(2)
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை இராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்.
3. மாய உலக அன்பை - நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே(2)
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே.(2)
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை இராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்.
4. ஆதரவான அன்பே - நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே(2)
உன்னத மா தேவ அன்பே
உள்ளம் கவரும் அன்பே.(2)
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை இராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்.
5. வாக்கு மாறாத அன்பே - திரு
வார்த்தையுரைத் தென்னை தேற்றும் அன்பே(2)
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே.(2)
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை இராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்.
1. துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே (2)
துதிகளின் மத்தியில் வாசஞ் செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே.
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம். (2)
2. கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே (2)
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததாலே ஸ்தோத்தரிப்போமே.
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் (2)
3. அக்கினி ஊடாய் நடந்தாலும்
ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும் (2)
சோதனையோ மிகப் பெருகினாலும்
ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே.
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் (2)
4. இந்த வனாந்திர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார் (2)
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே.
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் (2)
5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம் (2)
வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே.
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் (2)
1. மாறிடார் எம்மா நேசரே - ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே.
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை யேதும் வேறில்லையே
இணை யேதும் வேறில்லையே.
2. பாவியாக இருக்கையிலே - அன்பால்
பாரில் உன்னை தேடி வந்தாரே
நீசன் என்றுனைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே.
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை யேதும் வேறில்லையே
இணை யேதும் வேறில்லையே.
3. உள்ளத்தால் அவரை தள்ளினும் - தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே.
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை யேதும் வேறில்லையே
இணை யேதும் வேறில்லையே.
4. ஆவியால் அன்பைப் பகர்ந்திட - தூய
தேவனின் விண்சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க.
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை யேதும் வேறில்லையே
இணை யேதும் வேறில்லையே.
5. நியாய விதி தினமதிலே - நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே.
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை யேதும் வேறில்லையே
இணை யேதும் வேறில்லையே.
6. பயமத்தை நீக்கிடுமே – யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே.
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணை யேதும் வேறில்லையே
இணை யேதும் வேறில்லையே.
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை. (2)
1. வாழ் நாளையெல்லாம் வீண்நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்?
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வார்.
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை.
2. கட்டின வீடும், நிலம், பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவிட்டு உன் ஆவி போனால்
கூட உன்னோடு வருவதில்லை.
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை.
3. அழகும் மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை.
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை.
4. வானத்தின் கீழே, பூமி மேலே
வானவர் இயேசு நாமம் அல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே.
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை.
5. தீராத பாவம், வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய.
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை.
6. சத்திய வாக்கை நம்பியே வா
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பெயரை ஜீவ புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார்.
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை.
ஓ இயேசு உமதன்பு
எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது. (2)
ஓ இயேசு உமதன்பு
1. அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது
அன்றாடம் காலை மாலைகளிலும்
துதிக்க உயர்ந்தது (2)
ஓ இயேசு உமதன்பு
2. சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்
துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்
பங்கமில்லாமல் பதிலளிப்பேன்
என்றதால் பாடுகிறேன். (2)
ஓ இயேசு உமதன்பு
3. இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்
அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்
கருணையாயென்னைக் கரம் பிடித்தே
கர்த்தரே காப்பதாலும் (2)
ஓ இயேசு உமதன்பு
4. குறை உள்ளவ னானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரைகளில் மெதுவாய் நடத்துகிறீர்
இறைவனாம் இயேசு எல்லாவற்றிலும்
திருப்தியாக்குகிறீர் (2)
ஓ இயேசு உமதன்பு
5. தேவனுடைய வீட்டில் சித்தபடி துதிப்பேன்
ஏக இதயத்துடனே என்றுமதை மதிப்பேன்
ஆராதிக்க அருகராம் இயேசு
அல்லேலூயா ஆமென் (2)
ஓ இயேசு உமதன்பு
எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்
கெல்லாம் பெரியது. (2)
ஓ இயேசு உமதன்பு
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும் (2)
1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்.
ஆபத்திலே அருந்துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே.
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்.
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை.
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
3. திக்கற்றோராய் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலைமுடியும் எண்ணினீரே.
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
4. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே.
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
5. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே.
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
6. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம் நாமத்தில்
பரனே எனக்காய் ஜெயக்கொடியே.
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
7. என்னை முற்றும் ஓப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடுமே.
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே (2)
1. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும் (2)
2. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம் (2)
3. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே பெரிய மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்பக் கானான் தேசமதை (2)
திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே (2)
1. எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னைச் சந்திக்க வந்திடுவாரே.
இயேசு போதுமே, இயேசு போதுமே
எந்த நாளிலுமே, எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே, இயேசு போதுமே.
2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே.
இயேசு போதுமே, இயேசு போதுமே
எந்த நாளிலுமே, எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே, இயேசு போதுமே.
3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்.
இயேசு போதுமே, இயேசு போதுமே
எந்த நாளிலுமே, எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே, இயேசு போதுமே.
4. மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும்.
இயேசு போதுமே, இயேசு போதுமே
எந்த நாளிலுமே, எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே, இயேசு போதுமே.
1. ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்.
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்.
2. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்லக் குருடனின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்.
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்.
3. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே.
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்.
துதி கனம் மகிமையுமக்கே
ஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ ! நீரே ராஜாவே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் மிக ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஓ ! நீரே ராஜாவே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ ! நீரே ராஜாவே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ ! நீரே ராஜாவே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் மிக ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஓ ! நீரே ராஜாவே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ ! நீரே ராஜாவே