Tamil Bible Thoughtful Messages

loader-icon

1. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு 1:21

2.இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். லூக்கா 19:10

3. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:17

4. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். அப்போஸ்தலர் 4:12

5. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது. அவர்களில் பிரதான பாவி நான். 1 தீமோத்தேயு 1:15

6. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். ரோமர் 10:9

7. அதற்கு அவர்கள்; கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் . அப்போஸ்தலர் 16:31

1.தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16

2. ... முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். யோவான் 13:1

3.கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:2

4.நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். 1 யோவான் 3:4

5.தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. 1 யோவான் 4:9

6. அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 1 யோவான் 3:16

6 .நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறvநம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். வெளிப்படுத்தின விசேஷம் 1:6

1.காலம் நிறைவேறிற்று,தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று,மனந்திரும்பி,சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
மாற்கு 1: 15

2. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1: 12

3. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3: 16

4.வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
யோவான் 7: 38

5.என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 5: 24

6.இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்,
யோவான் 11: 25

1. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் ...
மத்தேயு 9:6

2.இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
மத்தேயு 26:28

3. நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
அப்போஸ்தலர் 2:38

4. அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
அப்போஸ்தலர் 10:43

5.ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கொலோசெயர் 3:13

6.(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
கொலோசெயர் 1:14

7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
எபேசியர் 1:7

8.நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
1 யோவான் 1:9

1. கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். யாத்திராகமம் 34 :14 2. நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். சங்கீதம் 5:7

3. உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம். சங்கீதம் 81 :9

4. பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். சங்கீதம் 96 :9

5. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். யோவான் 4:24

6. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். வெளி 13:8

1. கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 34:8

2.யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். சங்கீதம் 146:5

3.உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங்கீதம் 37:5

4.கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயதுதொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர். சங்கீதம் 71:5

5.அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 40:4

6.நிச்சயமாகவே முடிவு உண்டு: உன் நம்பிக்கை வீண்போகாது. நீதிமொழிகள் 23:18

1. எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன், இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும். சங்கீதம் 16:7

2.நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங்கீதம் 32:8

3.உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். சங்கீதம் 73:24

4.தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள், அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். சங்கீதம் 139:17

5. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6

6.இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது, அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர். ஏசாயா 28:29

1.கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர். 2 சாமுவேல் 22:2

2.கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்? சங்கீதம் 18:31

3.கர்த்தர் ஜீவனுள்ளவர். என் கன்மலையானவர். ஸ்தோத்தரிக்கப்படுவாராக. என் ரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக. 2 சாமுவேல் 22:47

4.3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே, உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும். சங்கீதம் 31:3

5.எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள். அந்தக் கன்மலை கிறிஸ்துவே. 1 கொரிந்தியர் 10:4

1.கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள், யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள், இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள். சங்கீதம் 22:23

2. அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள், கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். சங்கீதம் 113:1

3.ஜாதிகளே, எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள், ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள். சங்கீதம் 117:1

4 கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள். சங்கீதம் 135:2

5.அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள், அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள். வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள். சங்கீதம் 148:2&12

6. மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள், ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார். ரோமர் 15:11

7. மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது. வெளிப்படுத்தின விசேஷம் 19:5

1. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது, நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? சங்கீதம் 42:2

2. தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன், வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. சங்கீதம் 63:1

3. ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள், பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள், நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள். ஏசாயா 55:1

4. பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். யோவான் 7:37

5. அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன். வெளிப்படுத்தின விசேஷம் 21:6

6. ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள், கேட்கிறவனும் வா என்பானாக, தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். வெளிப்படுத்தின விசேஷம் 22:17


1.45 நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர், ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக. லேவியராகமம் 11

2 2 நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். லேவியராகமம் 19

3 26 கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக, நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன். லேவியராகமம் 20

4 40 நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக. எண்ணாகமம் 15

5 15 உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். 1 பேதுரு 1

6 16 நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. 1 பேதுரு 1

1. நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான். சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும், பலத்துப்போவான். யோபு 17:9

2.கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். சங்கீதம் 25:12

3.கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். சங்கீதம் 128:1

4 உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆகாய் 1:7

5 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6v

1.மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம். பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான். யோபு 28:28

2.கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு, அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும். சங்கீதம் 111:10

3.புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்: மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. நீதிமொழிகள் 10:13

4.பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது. முத்துக்களைப் பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது. யோபு 28:18

5. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்: அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். நீதிமொழிகள் 2:6

6.ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புக்கள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! ரோமர் 11:33

7 பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுள்ளதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. யாக்கோபு 3:17

1. இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது. ஏசாயா 13:9

2.நாள் சமீபமாயிருக்கிறது, ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது, அது மந்தாரமான நாள், அது புறஜாதிகளுக்கு வரும் காலம். எசேக்கியேல் 30:3

3. கர்த்தர் தமது சேனைக்கு முன் சத்தமிடுவார், அவருடைய பாளயம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது, கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்? யோவேல் 2:11

4.கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள். கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது. கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். செப்பனியா 1:7

5. கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். 2 பேதுரு 3:10

1 கர்த்தரின் வாசல் இதுவே, நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள். சங்கீதம் 118:20

2 வாசல்கள் வழியாய்ப் பிரவேசியுங்கள், பிரவேசியுங்கள், ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள், பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள், அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள், ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள். ஏசாயா 62:10

3 இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். மத்தேயு 7:13

4 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும்,வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். மத்தேயு 7:14

5 .நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். யோவான் 10:9

6 .ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். வெளிப்படுத்தின விசேஷம் 22:14

1.நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள், ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். மத்தேயு 26:41

2.உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். லூக்கா 6:28

3.நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார். லூக்கா 22:46

4.இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். கொலோசெயர் 4:2

5.உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன். ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். யாக்கோபு 5:13

6.எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். 1 பேதுரு 4:7


1. கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். சங்கீதம் 13:6

2. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். சங்கீதம் 23:6

3. தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர், கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார், உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். சங்கீதம் 84:11

4.கர்த்தர் நன்மையானதைத் தருவார், நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். சங்கீதம் 85:12

5. உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய், உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். சங்கீதம் 128:2

1. நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். மாற்கு 11:25

2. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். எபேசியர் 4:32

3. ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். கொலோசெயர் 3:13

4 . மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மத்தேயு 6:14

5. நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார். மாற்கு 11:26

1 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். மத்தேயு 16:24

2 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல. மத்தேயு 10:38

3 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். லூக்கா 14:27

4 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன். ஆயினும் நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். கலாத்தியர் 2:20

5 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். கலாத்தியர் 5:24

1 இராஜாக்கள் 17 :21 - அந்தப் பிள்ளையின் மேல் மூன்று தரம் குப்புற விழுந்து... இது எலியாவின் ஜெபம்

2 இராஜாக்கள் 4: 35 - அவன் மேல் குப்புறப்படுத்தான் அப்பொழுது அந்த பிள்ளை ...இது எலிசாவின் ஜெபம்
அப்போஸ்தலர் 20 :9,10 - அவன் மேல் விழுந்து அவனை அணைத்துக் கொண்டு கலங்காதிருங்கள்... இது பவுலின் ஜெபம்
லூக்கா 8:54 ,55 - பிள்ளையே எழுந்திரு என்றார். அவள் உயிர் திரும்ப வந்தது ...இது ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தை.
இயேசுவின் நாமத்தில் விடுதலை உண்டு
இயேசுவின் நாமத்தில் சுகம் உண்டு
இயேசுவின் நாமத்தில் வெற்றியுண்டு
இயேசுவின் நாமத்தில் சமாதானம் உண்டு
இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டு
ஏனெனில் நம்முடைய தேவன் சங்கீதம் 65: 2 - ஜெபத்தை கேட்கிறவர்.
நாம் எதைக் கேட்டாலும் இயேசுவின் நாமத்தில் கேட்கும்போது அதை நமக்குச் செய்வார்.

கர்த்தருடைய ஆலயத்தில் என்ன உண்டு?

1. கர்த்தருடைய ஆலயத்தில் மகிழ்ச்சி சங்கீதம் - 122:1

2. கர்த்தருடைய மகிமை சங்கீதம் 27 :4

3. தாவீதின் அனுபவம் - நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போல் இருக்கிறேன் சங்கீதம் 52: 8

4. உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய வீட்டின் நன்மையால் திருப்தி சங்கீதம் 65 :4

5. கர்த்தருடைய ஆலயத்தில் செழிப்பு சங்கீதம் 92: 13

6. பரிசுத்தமானது நித்திய நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது சங்கீதம் 93:5

7. கர்த்தர் பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார். ஆபகூக் 2 :20

8. இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் அவரைச் சேவிக்கிறார்கள். வெளிப்படுத்தல் 7: 15

9.ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்தில் தூணாக்குவேன். வெளிப்படுத்தல் 3: 12

10. பரிபூரண ஆனந்தம் சங்கீதம் 16: 11
'ஆமென்'

எரேமியா 29: 13 - உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால் என்னை தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் .
நாம் தேவனை எப்படி தேடுகிறோம்?

நீதிமொழிகள் 8: 17 - அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
நாம் தேவனை எந்த நேரத்தில் தேடுகிறோம் ?
ஏசாயா 55: 6 - கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் அவரை தேடுங்கள் அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கி கூப்பிடுங்கள்.
நம்முடைய தேவன் நமக்கு சமீபமாய் இருக்கிறார்.
எனவே நாம் அவரை நோக்கி கூப்பிட வேண்டும் நாம் அவரை கூப்பிடும் போது எல்லாவற்றையும் செய்ய விருப்பமாய் இருக்கிறார்.
யோவான் 14:14 - என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் .
இயேசுவின் நாமத்திலே நாம் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆனாலும் இவை எல்லாவற்றைப் பார்க்கிலும் மிக முக்கியமான காரியம்‌
மத்தேயு 6: 33 - முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்

1. கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். சங்கீதம் 48:1

2.கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர். சங்கீதம் 99:2

3. கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன். சங்கீதம் 135:5

4. கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை, நீரே பெரியவர், உமது நாமமே வல்லமையில் பெரியது. எரேமியா 10:6

5. உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். 1 யோவான் 4:4

மாற்கு 1: 31 - அதிகாலையில் இருட்டோடே புறப்பட்டு வனாந்தரமான ஒரிடத்திற்குப் போய் அங்கே ஜெபம் பண்ணினார்.
லூக்கா 6 :12 - அவர் ஜெபம் பண்ணும்படி ஒரு மலையின் மேல் ஏறி இரா முழுவதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார்.
லூக்கா 22: 44 - அவர் மிகவும் வியாகுலப்பட்டு அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் ஜெபத்திற்கு நமக்கு உதாரணமாகக் காணப்படுகிறார்.
1. நாம் அதிகாலையில் ஜெபிக்கிறோமா?
2. இரவில் ஜெபிக்கிறோமா?
3. ஊக்கத்தோடே ஜெபிக்கிறோமா?
4. விழித்திருந்து ஜெபிக்கிறோமா?
5. சபைக்காக ஜெபிக்கிறோமா?
6. பரிசுத்தவான்களுக்காக ஜெபிக்கிறோமா?
7. சபை மூப்பர்களுக்காக ஜெபிக்கிறோமா?
8. சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு அறிவிக்க ஜெபிக்கிறோமா?
9. சோர்ந்து போகாமல் ஜெபிக்கிறோமா?
நாம் இப்படி காணப்பட கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக

3 கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார், அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. சங்கீதம் 145:3

8.கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். சங்கீதம் 145:8

9 கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர், அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது. சங்கீதம் 145:9

14 கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார். சங்கீதம் 145:14

18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். சங்கீதம் 145:18

20 கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார். சங்கீதம் 145:20

13 சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, பிலிப்பியர் 3:13

18 முந்தினவைகளை நினைக்கவேண்டாம், பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். ஏசாயா 43:18

19 இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றும், நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். ஏசாயா 43:19

17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17

62 அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார். லூக்கா 9:62

14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன். 2 நாளாகமம் 7:14

7 நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன். ஏசாயா 43:7

10 அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிப்பிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள். உபாகமம் 28:10

16 உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன், உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது, சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது. எரேமியா 15:16

27 இவ்விதமாய் அவர்கள் என்நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள், அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார். எண்ணாகமம் 6:27

ரோமர் 12 :12 - ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள் .
சங்கீதம் 6: 9 - கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்வார்.
சங்கீதம் 109: 4 - நானோ ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
மத்தேயு 21 :22 - நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளை கேட்பீர்களோ...
லூக்கா 22: 40 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள்.
லூக்கா 18: 1 - சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் அப்போஸ்தலர் 10: 2 - கொர்நேலியு எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான் .
நாம் எப்படி காணப்படுகிலறாம் ?
ஜெபம் தான் ஜீவன், ஜெபம் தான் நம்முடைய ஆயுதம் , ஜெபம் தான் பெலன் நாம் ஜெபத்திலே உறுதியாக விழித்திருந்து சோர்ந்து போகாமல் ஜெபிக்கும் போது நம்முடைய தேவைகளை இயேசு கிறிஸ்துவானவர் நிறைவாக்குகிறார்.